வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் யுவதியின் விபரீத முடிவு!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீத முடிவை குறித்த யுவதி எடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் டினுசியா (வயது 19) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.