பதுளையில் உதவியின்றி வீதியில் பரிதாபகரமாக உயிரிழந்த தமிழ் ஆசிரியர்!

வீதியால் சென்று கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பதுளை – ஹப்புத்தளை நகரில் மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பாடசாலையொன்றின் கற்பிற்கும் 51 வயதுடைய தமிழாசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வீதியில் மயங்கி வீழ்ந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல எவருமே முன்வரவில்லை.

1990 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டு, அம்புலன்ஸ் ஊடாக  அவர் ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுளளதாக மருத்துவமனை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.