கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தர்மபுரம் கல்மடு பகுதியில்  இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மணல் வியாபாரிகளிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், சம்பவ இடத்திற்கு பொலிசார் ஏன் சென்றனர் என்பது தொடர்பிலான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.