பெண்களே வெறும்15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? இதை செய்து பாருங்க அசந்து போய்விடுவீங்க

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன. அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள்.

இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளியமுறையில் முகத்தை பொலிவாக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  • அவகேடோ பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.
  • கடலை மாவுடன் மஞ்சள் அல்லது கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள். அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பிரகாசம் அடையும்.
  • ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.
  • எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.
  • பாதாம் பருப்பை தூளாக்கி அதனுடன் பால், ஓட்ஸ் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகத்தின் நிறத்தை மாற்றி பொலிவைக் கூட்டுகிறது.