பிக்பாஸ் வீட்டில் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண் யார் தெரியுமா ?

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசன்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நேற்று ஞாயிற்றுகிழமை ஆரம்பமானது.

பிக்பாஸ் சீசன் 5 யில் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா ரகுநாதன் கலந்துகொண்டுள்ளார். இவர் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார். மேலும் மதுமிதா ரகுநாதன் ஜெர்மனியில் குடியேறிய இலங்கைத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர் ஜெர்மனியில் தான் பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு மதுமிதா ஃபேஷன் டிசைனிங்கில் ஒரு தொழில்முறை படிப்பை செய்தார் மற்றும் மாடலிங் செய்வதிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாம்.

மேலும் மதுமிதா கடந்த இரண்டு வருடங்களாக ஒரு ஐடி நிபுணராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான பாடகி தீ- யின் நண்பர்களில் ஒருவர்தான் மதுமிதா. இந்தியாவில் பொழுதுபோக்கு துறையில் ஒரு தொழிலை உருவாக்குவதை மதுமிதா நோக்கமாகக் கொண்டுள்ளாராம்.