புதிய விலையில் பால்மா !

நாட்டில் பால்மா ஒரு கிலோ பக்கட் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.அதற்கமைய புதிய விலை 1145 ரூபாவாக ஒருகிலோ பக்கட் விற்பனை செய்யப்படும் என்றும் அச் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இதேவேளை கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கின்ற பால்மா அடங்கிய கன்டேனர்களை வருகின்ற செவ்வாய்க்கிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை இன்று தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த கன்டேனர்கள் சிக்கியிருந்தன. எனினும் மத்திய வங்கி ஆளுநர், கன்டேனர்களை விடுவிக்க தேவையான டொலர்களை அனுமதித்திருப்பதால் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவிக்கின்றார்.