பெண்களே கொஞ்சம் உஷாரா இருங்க! விரல்களில் இதை பயன்படுத்துவதால் புற்றுநோய் வருமாம்! எச்சரிக்கை தகவல்

பெண்கள் தங்களை அழுகுபடுத்திக்கொள்ள மிகவும் விரும்புவார்கள். குறிப்பாக கையில் நெயில் பாலிஷ், கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக் என்று பல பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்து கொள்வார்கள்.

அவர்கள் உடுத்தும் ஆடைக்கு ஏற்ப விரல்களில் நெயில் பாலிஷ் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனில் இருந்து வெளிப்படும் நறுமணம் அனைவருக்கும் பிடிக்கும்.

இதனால் அடிக்கடி நுகர்ந்து பார்த்து ரசிப்பதும் உண்டு. ஆனால் இதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சரி வாங்க நெயில் பாலிஷ் கையில் வைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்..

  • ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
  • நெயில் பாலிஷ் அடிக்கடி போடுவதால் நகங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகிறது. இதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற கெமிக்கல் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
  • ரசாயனம் கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும் அன்றிரவே அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.