யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து வசந்தராசா (வயது44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்ததை டுத்து சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளதுடன், அவரை கடித்த வளர்ப்பு நாய் மறுநாளே உயிரிழததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.