நீங்கள் புதிதாக கட்டிய வீட்டிற்குள் பசுவை அழைத்து வர சொல்வது ஏன்? காரணம் தான் என்ன? வாங்க பார்க்கலாம்

சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் வாழும் ஜீவராசி பசு என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்

அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.

பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியலாளர்கள் பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது என்கிறார்கள்

கிரஹப்பிரவேசம் செய்யும் வீட்டில் பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.

தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு வளமான செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான சடங்கு மற்றும் சம்பிரதாயத்தில் இதை நாம் செய்கிறோம்

பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. அதனாலே தொன்றுதொட்டு நாம் பசுவை புது மனைக்குள் கொண்டுவருகிறோம்..

கிரஹப்பிரவேசத்திற்கு வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம்…இதனாலே இந்த சம்பிரதாயத்தை நாம் கடைபிடிக்கிறோம்.