மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இன்று முதல் ஆரம்பம் !

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு 0112 677 877 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் அவசியமாயின், அலுவலக வேலை நாட்களில் முற்பகல் 9 மணி முதல் 4 மணி வரையில் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மாவட்ட செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படுமென குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.