தினமும் இரவில் விளக்கு ஏற்றியவுடன் தயவு செய்து இந்த பொருட்களை மட்டும் வெளியில் கொடுக்காதீர்கள்! அப்பறோம் உங்களுக்கு கஷ்டம் தானாம்

நாம் உழைக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து மொத்த பணத்தையும் செலவு செய்ய வைத்துவிடும்.

கைநிறைய உழைத்த பணத்தினை ஒரு பக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

செல்வம் கொழிக்க உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை-

வியாழக்கிழமைகளில் குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கற்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். வீட்டில் பலவிதமான ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும். பின் மஞ்சள் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. காலைப் பொழுதில் பூஜை செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும். பசுவின் கோமயத்தில் சிறிதளவை தினமும் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டிற்கும் தெளிக்கவும் . 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கிவிட்டு மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி, ஓடும் நீரில் விடவும். இவ்வாறு செய்தால் பணப்பிரச்சினை தீரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.