நாட்டில் விரைவில் வரவுள்ள புதிய நடைமுறை!

எதிர்காலத்தில் கொழும்பில் உணவகங்களிற்கு உணவருந்த செல்பவர்கள் தங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான அட்டையை காண்பிக்கவேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் இது குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு நகர உணவகங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஹார்ப்போ குணரட்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை காண்பித்தால் உணவகங்களிற்கு வருபவர்களிற்கு நம்பிக்கை ஏற்படும் என அவர் கூறினார்.

அதன்படி உணவகங்களின் நுழைவாயிலில் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி அட்டையை காண்பிக்கலாம் அல்லது அதன் படத்தை தொலைபேசியில் காண்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதேபோன்று உணவகங்களில் பணியாற்றுபவர்களும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை குறிக்கும் வகையில் பட்ஜ் அணிந்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.