பெருந்தொகையான மருந்துப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிற்கு வந்த இந்திய விமானம்!

நட்பு நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் திட்டத்தின் கீழ் நான்காவது தொகுதி மருத்துவப்பொருட்கள் இன்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டன. இந்தியாவின் விசேட விமானம் ஒன்றில் இந்த பொருட்கள் எடுத்து வரப்பட்டன.12.5 தொன் நிறைக்கொண்ட மருத்துவப்பொருட்களே இன்று இலங்கையை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே கொரோனா வைரஸ் இலங்கையின் பரவ ஆரம்பித்த காலப்பகுதியில் சார்க் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நடத்திய செய்மதி காணொளி மாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழிக்கு அமையவே இந்த மருத்துவப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.