யாழ்.நாவற்குழியில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம் – 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்

யாழ்.நாவற்குழியில் வீடு புகுந்து ரவுடிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவற்குழி ஜே/294 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றய தினம் இரவு நுழைந்த ரவுடிகள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர். அத்துடன், வீட்டிருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தலை மற்றும் கையில் காயமடைந்த நிலையில் தந்தையும், மகன்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சோி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.