வெளிநாட்டில் இருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருர் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருந்தால் விலக்களிப்பு வழங்கப்படவுள்ளது.

நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக செய்துக்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியேற அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.