வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

வாகன இறக்குமதியின் போது, அறவிடப்படும் வரியை, டொலரில் செலுத்த இணக்கம் தெரிவிப்போருக்கு மாத்திரம், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் தற்போது மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டொலரில் வரியை செலுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.