கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனை கருவி செயலிழப்பு

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பி.சி.ஆர் சோதனை கருவி, செயலிழந்துவிட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் பயணிகளுக்காக இந்த சோதனை வசதி செயற்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக இந்த அமைப்பு செயலிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த சோதனை வசதி, நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர், பிசிஆர் சோதனைகள் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதன் காரணமாக நேற்று விமான நிலையத்தில் பதிவான குழப்பமான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப்பயணிகள் விரைவான பிசிஆர் சோதனை இல்லாமைக் காரணமாக, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். நாட்டிற்கு வருகை தர விரும்பும் சுற்றுலா பயணிகள் விடுதி வசதிகள், போக்குவரத்து, பிசிஆர் சோதனைகள் போன்ற தங்குமிடங்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதன்படி நேற்று முன்பதிவு செய்யப்பட்ட ஏற்பாடுகளுடன் வந்திறங்கிய சுற்றுலா பயணிகளே விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அமைச்சர் ரணதுங்க கூறியுள்ளார்.