சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

மாதம்பே செம்புகட்டிய பகுதியில் வழிபாட்டிடம் ஒன்றிற்கு சடங்கு செய்யச்சென்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பூசாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய யாகன்வெல பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்ட நிலையில், கைதாவருக்கு திருமணமாகி 8, 10 வயதான இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செம்புகட்டிய பகுதியில் வசிக்கும் பெண் தனது தாயுடன் வழிபாட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்தது. கைதானவர், மாதம்பே செம்புகட்டிய பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் சில காலமாக இந்த வழிபாட்டிடத்தை நடத்தி வந்த நிலையில் அங்கு சடங்கு செய்ய தாயும், மகளும் சென்றுள்ளனர்.

இதன்போது வழிபாட்டிடத்தின் பின்புறமுள்ள வீட்டின் சமையலறைக்குச் சென்று ஏதாவது உணவு தயாரித்துக் கொண்டு வருமாறு அந்த பெண்ணின் தாயை அனுப்பியுள்ளார். அவர் வீட்டின் பின்புறம் சென்றதும், யுவதியை குறித்த நபர் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இதேவேளை கைதான பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழிபாட்டிடத்திற்கு வந்த பல யுவதிகளுடன் சில்மிசம் செய்தமை தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.