தனது சுய முயற்சியினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்தை வெற்றிகரமாக தயாரித்த ஈழத்துப் பெண்மணி..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முல்லைத்தீவில் மூலிகை மருந்து தயாரித்த பெண் முயற்சியாளரை நேரில் சென்று சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் மற்றும் புதுக்குடியிருப்பு செயலாளர் தி .ஜெயகாந் உள்ளிட்ட குழுவினர் அவரது உற்பத்தி செயற்பாடுகள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு அவர் தயாரித்த மருந்துக்கு அங்கீகாரம்பெற நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகச் சிறந்த ஒரு சுயதொழில் முயற்சியாளராக தனது தொழிலை ஆரம்பித்து தற்போது ஒருஉற்பத்தி நிறுவனத்தை நடத்திவருகிறார். கிருஷ்ணதாஸ் சாய்ராணி இவர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்காக மருந்து வில்லை ஒன்றை உற்பத்தி செய்துள்ளார். இந்த வில்லைக்கான அங்கீகாரம் வழங்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் , முயற்சியாளரின் உற்பத்தி தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந்த் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, வடமாகாண சுதேச மருத்துவ துறை ஊடாக இவரது மருந்துக்காக அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை குறித்த பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார்.தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார்.கூட்டுக் குளிசை வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும்.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார் கிருஷ்ணதாஸ் சாய்ராணி கடந்தகால யுத்தத்தில் கணவனை இழந்த 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து முகாமுக்கு சென்ற இவர் தனது வாழ்வை நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.1300 ரூபா பணத்தை கொண்டு, அப்பம் சுட்டு விற்று தனது சுயதொழில் முயற்சியை ஆரம்பித்த இவர், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் அல்லாது, தேசிய ரீதியில் பல்வேறு விருதுகளை தட்டி கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முன்னுதாரணமாக சிறந்த ஒரு பெண் சுயதொழில் அதிபராகவும், ஒரு உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கை பிரதானமாகக் கொண்ட ஒரு உற்பத்தி நிறுவனத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றமையும்,இவரால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.