கல்யாணம் நடக்கவில்லை என்ற கவலையா? இத மட்டும் செய்யுங்க

திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.

திருமணத் தடை உள்ள பலரும் பல வகையான விரதங்களையும், பலவகையான கோயில்களுக்குச் சென்று வருவதையும், திருமணம் கைகூட பரிகாரங்கள் செய்வதையும் பார்த்திருக்கிறோம். நிச்சயம் திருமண வயது வந்தோருக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கும்.

ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் விரதமானது திருமணம் முடிவாகாமல் தாமதம் ஆகி வரும் இளைஞர்களுக்கானது. அதாவது குரு பகவானின் ஆசி கிடைத்தால் நிச்சயம் திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.

அதாவது பகவானுக்கு உகந்த நாளான வியாழக் கிழமை அன்று அரைப் பொழுது அல்லது முழுப் பொழுது விரதமும் இருக்கலாம். மேலும் கோயிலுக்குச் சென்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

வீட்டிலும் குரு பகவானுக்கு படையலிட்டு, நம்முடைய விரதத்தினை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் என திருமண வரம் கூடும்வரை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடல் வேண்டும்.

மேலும் திருமண வாழ்க்கை கூட வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்போர் திருமணஞ்சேரி வழிபாடு செய்தல் வேண்டும். நிச்சயம் சிறப்பான திருமண வாழ்க்கை வெகு விரைவில் கூடும்.

மேலும் குரு பகவானின் சிறப்புமிக்க தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.