தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறுவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

தொற்றா நோய்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு செலுத்தப்படும் பைசர் தடுப்பூசி காரணமாக, வேறு ஏதேனும் நோய் அறிகுறிகள் ஏற்படுமானால் அது குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 0702703954 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விசேட தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், காய்ச்சல் ஏற்படுமாயின், பெரசிடமோல் வில்லையொன்றை குடிக்குமாறு வைத்தியர்கள் கூறுகின்றார்.

அத்துடன், களைப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்க வேண்டாம் என விசேட வைத்திய நிபுணர் ஷ்யாமன் ரவிந்திரஜித் தெரிவித்துள்ளார்.