கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷனி திசாநாயக்க (Roshanie Dissanayake) இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

சொத்தின் உரிமையைப் பாதுகாக்க நகராட்சி மன்றத்தில் சொத்து பதிவு செய்வது அவசியமானது என அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.