வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய பி.சி.ஆர் ஆய்வகம், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கையினை நேற்றைய தினம் ஆரம்பித்தது.

அதன்படி, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானின் நரிட்டோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தவர் ஆவார்.

அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதல் வெளிநாட்டவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவர் நேற்று மாலை 6:30 மணியளவில் டுபியாலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு வருகை தந்தவர் ஆவார்.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.