கிளிநொச்சியில் நபரொருவர் கீழே விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி சந்தையில் வைத்து விவசாயி ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவமொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளார்.

இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.