கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு மலேசியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.