யாழில் அரச உத்தியோகத்தர் கொரோனா தொற்றால் பரிதாப மரணம் !

யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமதி தமிழினி பிரபாகரன், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், தாய் சங்க முன்னாள் நிர்வாக சபையின் பொருளாளரும் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான வைரவபிள்ளை பிரபாகரன் அவர்களுடைய மனைவி ஆவார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதேவேளை யாழில் அண்மைய நாட்களில் இளம்வயதினர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்ற சம்பவம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.