இலங்கையில் இன்று பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இலங்கையின் வானிலையில் இன்று பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் காலையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.