சுமார் 800 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன!

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன (Nihal Seneviratne) இதனை குறிப்பிட்டுள்ளார். சுமார் 800 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வரும் மாதங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக உணவுப் பொருட்களின் பங்குகளை விரைவில் விடுவிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் நியமிக்கப்பட்டால், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு இல்லையெனில், அனைத்து இறக்குமதிகளும் நிறுத்தப்படுவதுடன், நாட்டின் அத்தியாவசிய உணவு பொருட்கள் அக்டோபர் இறுதி வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.