உங்களுக்கு அடிக்கடி தும்மல் ஏற்படுகின்றதா? அப்போ இதை குடித்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்

பொதுவாக நமக்கு பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி தும்மல் ஏற்படுவது வழக்கம். ஒருமுறை தும்மும்போது அது நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது.

 

ஆனால் அடிக்கடி தும்மும்போது அது நம்மை எரிச்சலடைய செய்யும். குளிர்ச்சி அல்லது சில வாசனைகளால் ஏற்படும் திடீர் ஒவ்வாமை போன்ற காரணங்களாலும் தும்மல் வரலாம்.

சில நேரங்களில் தொடர்ந்து தும்மல் ஏற்படுவது நமக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே நிறுத்த அற்புத பானம் ஒன்று உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.    

தேவையான பொருள்

  • தூதுவளை பொடி – 5 கிராம்
  • மிளகு பொடி – 5 கிராம்
  • பால் – 150 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொள்ளவும். பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இந்த பாலுடன் தூதுவளை பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த பாலை தொடர்ந்து காலையில் குடித்து வர தும்மல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.
  • மேலும் இவ்வாறு உருவான பால் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.