உங்கள் வருங்கால கணவர் எப்படி இருப்பார்னு தெரிஞ்சுக்க ஆசையா? அப்போ இதை படிங்க

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவன் அல்லது காதலன் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் அவரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்னென்ன விஷயங்களை செய்தால் அவரிடம் காரியம் சாதிக்க முடியும்.. அவர் எதை விரும்புவார்.. எதை விரும்பமாட்டார் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக தான் இருக்கும்…! ஏனென்றால் பெண்கள் தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை தங்களது கணவருடன் தான் கழிக்கப்போகிறார்கள் அப்படிப்பட்ட கணவர் நம்மை எப்படி நடத்துவார் என்று தெரிந்து கொள்ள எந்த பெண்ணுக்காவது ஆர்வம் இல்லாமல் இருக்குமா என்ன? இந்த பகுதியில் ஆண்களின் ராசிப்படி தன் துணைக்கு அவர் எப்படிப்பட்ட கணவராக இருப்பார் என்பதை காணலாம்..!

1. மேஷம்

மேஷ இராசி ஆண்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்.. அவர்கள் ரோமேண்டிக்கான பல விஷங்களை தன் துணைக்காக செய்வார்கள்.. அவர்கள் தன் துணையின் மேல் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சில சமயங்கள் நேர்மாறாக நடந்து கொள்வார்கள். அடம்பிடிப்பவர்களாகவும் மிருகத்தனம் கொண்டவர்களாகவும் நடந்து கொள்வார்கள்.

2. ரிஷபம்

ரிஷப ராசி ஆண்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு ஆதாரவானவர்களாவும் இருப்பாவர்கள். எப்போதும் தனது பெற்றோர்களுக்கே முதல் இடம் கொடுப்பார்கள். ஆனால் இவர்களது மிகப்பெரிய குறையே இவர்களது அடம் பிடிக்கும் குணமும், சொதப்பல்தனமும் தான். ராசிப்படி இவர்கள் நிலைப்புத்தன்மை உடையவர்கள், சார்ந்து இருக்க கூடியவர்கள், ரொமேண்டிக்கான குணம் கொண்டவர்கள்.

3. மிதுனம்

இந்த இராசிக்காரர்கள் மிகவும் சுவரசியமான பண்புகளை கொண்டவர்கள். இவர்கள் அனைவரிடமும் நன்றாக பழக கூடியவர்கள். இவர்களது நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது தான்.. இவர்கள் தங்களது பேச்சிற்கு எல்லா இடங்களிலும் மரியாதை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த இராசிக்காரரான உங்க லவ்வர் திடிரென்று அவுட்டிங் பிளான் ஏதாவது செய்தால் அது உங்களுக்கு சர்பிரஸ் ஆக தான் இருக்கும். இது போன்ற பல சர்பிரைஸ்களை இவரை காதலிப்பவர்களுக்கு கிடைத்து கொண்டே தான் இருக்கும். இவர்கள் சீக்கிரமாக முடிவு எடுக்கும் திறன் கொண்டவர்கள்.

4. கடகம்

இந்த ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களது துணையிடத்தில் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்கள். இவர் உங்களது குடும்பத்தையும் சிறப்பாக பார்த்துக் கொள்ள கூடியவராக இருப்பார். உங்களை நேசிக்கும் அளவிற்கு உங்களது குடும்பத்தையும் நேசிப்பார். அவரை நீங்கள் ஒதுக்குவதாக அவருக்கு தோன்றினால் உங்களிடம் மிகவும் அதிகமாக பெசசீவ்வாக நடந்து கொள்வார்.. மொத்தத்தில் கடக ராசி காரர்களின் மனைவி கொடுத்து வைத்தவள் தான்…!

சிம்மம்

சிம்ம ராசிக்கார ஆண்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு காதலனாக தனது காதலியை மிக அதிகமாக பாதுகாக்கும் குணம் கொண்டிருப்பார்கள். எனவே அவருடன் நீங்கள் சண்டையிட வேண்டாம். உங்கள் மீதான காதலை தான் இப்படி வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர்

6. கன்னி

கன்னி இராசிக்காரர்கள் எதிலும் ஒரு பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். இவர்கள் எதையும் நேருக்கு நேராக பேசக்கூடியவர்கள். இவர்களுடனான உறவு நீடிக்க நீங்கள் அடிக்கடி இவர்களை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். புகழ்ச்சியினால் இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களது முகத்தை காண கொஞ்சம் அதிக தூரம் பயணம் செய்வதில் ஒன்றும் தவறில்லை என்று நினைப்பார்கள்.

7. துலாம்

துலாம் இராசிக்காரர்கள் மிகவும் கூலாக இருக்க கூடியவர்கள். இவர்கள் எதையும் சமாளித்து நடந்து கொள்வதில் திறமைசாளிகள். இவர்கள் அறிவானவர்கள் மற்றும் லாஜிக்காக சிந்தனை செய்யக் கூடிய திறன் கொண்டவர்கள். இவர்கள் ஒரு அழுத்தமான காரணம் இல்லாமல் எதற்காகவும் வாதிட மாட்டார்கள். மேலும் இவர்கள் தங்களது காதலிக்கு பல ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

8. விருச்சிகம்

விருச்சிக ராசி ஆண்கள் காதலில் சிறந்தவர்கள்.. இவர்கள் தங்களது காதலுக்காக எதையும் செய்வார்கள். தன் காதலியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் இவர்களுக்கு உடலுறவு காதல் என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யும் பண்புடையவர்கள்…

9. தனுசு

இவர்கள் நல்ல அறிவாளிகளாக இருப்பார்கள். நட்புடன் பழகுவார்கள். இவர்களுக்கு புதுமைகள் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். தனது வாழ்க்கையை காதலித்து வாழ்வார்கள். இவர்களுடன் இருந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் சளிப்பு என்பது உண்டாகாது. ஆனால் இவர்களது சுதந்திரத்தை நீங்கள் கெடுக்க கூடாது.

10. மகரம்

இவர்கள் தங்களது துணைக்கு பிடித்தமான அடக்கமான ஒரு துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆசைகள் ஏராளமாக இருக்கும். தன் துணையின் மீது அதிகமாக அக்கறை வைத்திருப்பார்கள். மற்றவர்களை சிரிக்க வைக்கும் பண்பு இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். இவர்கள் கவிதைகளாக எழுதி தள்ளுவர்கள்.. அல்லது இவர்களது பார்வைகளே கவிபாடு. இவர்களை போன்ற துணை கிடைத்தால் நீங்கள் அதிஷ்டசாலி தான்..

11. கும்பம்

இந்த ராசிக்காரர்கள் சமூக ரீதியாக நிறைய நண்பர்களை பெற்று இருப்பார்கள். இவர்கள் காதலில் சிறந்தவர்கள். மேலும் மேச்சூர்ராக நடந்துகொள்வார்கள். இவர்கள் காதலில் ஏதேனும் தவறு நடக்கிறது என்றால் அதனை உடனடியாக உங்களிடம் பேசி நல்ல முடிவு காண்பார்கள். இவர்கள் ஒரு முறை காதலித்துவிட்டால், அந்த காதலுக்கு உண்மையானவர்களாக இருப்பார்கள்.

12. மீனம்

மீன ராசிக்காரர்கள் அனைவரை விடவும் அதிக ரொமேண்டிக் ஆனவர்கள்.. இவர்களுடன் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக தான் இருக்கும். இவர்கள் எல்லா விஷயத்திலும் தங்களது துணையை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் இவர்களை பற்றி ஏதாவது தவறான கருத்துக்கள் பரவினால் இவர்களால் தாங்க முடியாது.