மின்னல் தாக்கத்தால் இலங்கை வரலாற்று சிறப்புமிக்க விகாரை சேதம்

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க லங்காதிலக்க விஹாரையின் கட்டடத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலனறுவையிலுள்ள லங்காதிலக்க விஹாரையின் கட்டடத்தின் மீதே இந்த மின்னல் தாக்குதல் இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல் தாக்கம் காரணமாக லங்காதிலக்க விஹாரையின் கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில், மின்னல் தாக்கத்தினால் சேதடைந்துள்ள லங்காதிலக்க விஹாரையின் புனர்நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார். இந்த மின்னல் தாக்கத்தினால் விஹாரையின் சுவரொன்றுக்கே சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், விஹாரையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க புத்தர் சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த பழங்கால சிலை பொலனறுவையில் உள்ள தனித்துவமான புத்தர் நினைவுச்சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது மன்னர் பராக்கிமபாகுவால்(1153-1186) கட்டியதாக கருதப்படுகிறது.