இலங்கையில் பால்மா விலை தொடர்பில் நாளை மறுதினம் இறுதி தீர்மானம்!

பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழன்று கூடவுள்ள நிலையில் இது தொடர்பில் கல்லந்துரையாடப்படவுள்ளது.

இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை 200 ரூபாயில் பால்மா விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடந்த வாரம் நிதி அமைச்சு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.