கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்..!! சீன ஆய்வு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துள்ளதாக சீன நிறுவனமொன்று அறிவித்துள்ளது. குரங்குகளுக்கு மருந்து ஏற்றப்பட்டு நடத்தபட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனமே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கொரோனாவை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன.இந்த நிலையில், சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.ஒரு வாரத்தின் பின்னர் பரிசோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.