இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அரியவகை வண்ணத்துப்பூச்சி

பதுளை மாவட்டம் ஹாலிஎல பகுதியில் சுமார் எட்டு அங்குலம் நீளமுள்ள மிக அரிதான வண்ணத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஒரு தோட்டத்தில் மரத்தடியின் கீழ் குறித்த வண்ணத்துப்பூச்சி மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘லூனா’ என்று அழைக்கப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி இலங்கையில் மிகவும் அரிதான வண்ணத்துப்பூச்சிகளில் ஒன்றாகும்.

மேலும் இது ஒரு பெண் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த ‘லூனா’ வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, குடியிருப்பாளர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து போனதுடன், இந்த வண்ணத்துப்பூச்சியை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.