வவுனியாவில் திடீர் என சீமெந்துக்கு தட்டுப்பாடு!

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகளை முன்னெடுக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கான சீமெந்துக்கு வவுனியாவில் திடீர் என தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் அமைந்துள்ள கட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களிற்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதற்காகச் செல்லும் பொதுமக்கள் அங்கு இல்லாமையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.