கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்! அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில் 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயார் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் (19.09.21) நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன் துஷ்யந்தினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் யாழ் போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இவரது உயிரிழப்பு கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.