பேருந்து மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!

கினிகத்தேனை – அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டி, பெனிசுதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய சரத்குமார பியதாஸ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்குச் சென்ற நாவலப்பிட்டி டிப்போவுக்கச் சொந்தமான திருத்தப்பணி சேவை பேருந்து, குறித்த நபர் மீது மோதியுள்ளது.

இதன்போது பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது தலைமறைவாகியுள்ளர்.

படுகாயமடைந்த குடும்பஸ்தர் நாலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பேருந்தின் சாரதியை நாவலப்பிட்டி போக்குவத்துப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.