இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்பு செய்ய வேண்டும் எனவும் வட்ஸ்அப் ஊடாக சந்தேகநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் வட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான போலி குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.