மன்னாரில் உள்ள தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 15 பேர்: அனைவரையும் கொடுரமாக தாக்கி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மன்னாரில் உள்ள தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் நேற்று மாலை வேளையில் மதுபோதையில் வீடொன்றிலுள் அத்துமீறி நுழைந்த 15 பேர் வீட்டில் இருந்த அனைவரை கொடுரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

குறித்த வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (44) என்பவரை கடுமையாக தாக்கியதன் காரணமாக கடும் காயம் அடைந்த குறித்த குடும்பஸ்தர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வீடு கடுமையான தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு குறித்த பகுதிக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (44) என்ற குடும்பஸ்தர் சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.