இந்தியாவிலிருந்து கப்பலில் இலங்கை வந்த 20 ரயில் பெட்டிகள்

சென்னையிலுள்ள ICF (Integral Coach Factory) ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் ஊடாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கடன் திட்டத்தின் ஊடாக 160 ரயில் பெட்டிகளை இந்தியா வழங்கவுள்ள நிலையில், இவைகளின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி இந்த ரயில் பெட்டிகளின் கொள்வனவுக்காக 100 மில்லியன் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.