யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இணுவில் காரைக்கால் சிவன் கோவிலடியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அதோ இடத்தை சேர்ந்த இருவர் கதைத்துக் கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் வந்த 5 மேற்பட்ட நபர்கள் கண்மூடித்தனமாக வாளவெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.