பெண்களே உங்கள் முகம் தங்கம் போல் ஜொலிக்கனுமா? அப்போ பீட்ரூட்டை இப்படி பயன்படுத்தி பாருங்க அசந்து போய்விடுவீங்க

பொதுவாக பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முக அழகிலும் பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் விட்டமின் சி இருப்பதால் முகத்தில் தூசு, தேவையற்ற இறந்த செல்களை நீக்க உதவும். கருவளையங்கள், கரும்புள்ளிகள் மறையும்.

எனவே இவற்றை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையானவை 

  • பீட்ரூட்
  •  தயிர்
  • கடலை மாவு
  • எலுமிச்சை சாறு

 செய்முறை

  • பீட்ரூட்டை அரைத்து அதன் சாறை எடுத்துக்கொல்ளுங்கள். அதில் தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
  • மாஸ்க் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளுங்கள். நன்கு துடைத்துவிட்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
  • 20 முதல் 25 நிமிடங்கள் ஊற வையுங்கள். நன்கு காய்ந்ததும் முகத்தில் தண்ணீர் தெளித்து வட்டப்பாதையில் தேய்த்து மசாஜ் செய்து பேக்கை கழுவுங்கள்.
  •  வெதுவெதுப்பான நீர் பயன்படுத்துங்கள். இறுதியாக முகத்தில் ஈரப்பதம் இருக்க மாய்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.  இப்படி வாரம் இரண்டு முறை இந்த பீட்ரூட் மாஸ்க் அப்ளை செய்யுங்கள்.