திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கைவிடப்பட்ட ஒரு மாத சிசு உயிருடன் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 1 மாதம் மதிக்கத்தக்க சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

மீட்கப்பட்ட சிசு கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) காலை அப்பகுதி வீதியோரத்திலிருந்து சிசு மீட்கப்பட்டதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கோண்டு வருவதாகவும் கிண்ணியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.