யாழில் மனைவி கணவனைக் கொலை செய்தமைக்கான காரணம் வெளியானது !

யாழ்.அரியாலையில் கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்றாக மனைவி பொலிஸார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் யாழ்.அரியாலை – பூம்புகார் 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு நடந்தேறியுள்ளது.சம்பவத்தில் துரைராசா செல்வராசா (32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருவது,அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், சில வருடங்களின் முன் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண்ணை காதல் திருமணம் முடித்தார்.

தற்போது, பூம்புகாரில் வசித்து வரும் தம்பதிக்கு பெண் குழந்தையொன்றும் உள்ளது. இராணுவத்தின் மின்னியல், பொறியியல் பிரிவில் சில காலம் பணியாற்றிய அவர் ஒழுங்கீனம் காரணமாக அங்கிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மது, போதைக்கு அடிமையான அவர், தினமும் தன்னை துன்புறுத்துவதாக மனைவி தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்களை செய்த அவர், தற்போது அரியாலையில் மணல் விற்பனை தொழிலில் ஈடுபடுபவர்களிடம் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம் போல போதையில் நேற்றிரவும் தன்னை தாக்கியதாகவும், வீட்டிலிருந்த திருகுவளையை எடுத்து தாக்கியதில் அது கணவனின் தலையில் பட்டு அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கைதான மனைவி தெரிவித்துள்ளார்.

25 வயதான குடும்பப் பெண் யாழ்ப்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.