யாழில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் பரிதாபமாக பலி !

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்றிரவு சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் வேகமாக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது சீமெந்து கட்டில் காணப்பட்ட இரும்புக் கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியதனால் இளைஞர் படுகாயமடைந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.