பண்டாரவளையில் உயிரிழந்த தாயை பார்க்க கொவிட் தொற்றுக்குள்ளான மகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல்

பண்டாரவளையில் உயிரிழந்த தாயை பார்க்க கொவிட் தொற்றுக்குள்ளான மகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

17 வயதான யுவதிக்கு இந்த வாய்ப்பினை கொடுத்து நெகிழ்ச்சியான செயலினை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகளுக்கு தாயின் சடலத்தை பார்வையிடுவதற்காக சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மகள் கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தாய் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் பண்டாரவளை, ஒபடஎல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியாகும்.

குறித்த யுவதி தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று தனிமைப்பட்டிருந்த நிலையில் அவரது தாயார் வேறு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சங்கடமான இந்த தருணத்தில் தாயினை பார்க்க பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.