ஆண்கள் ஏன் மனைவியிடம் நிறைய பொய் சொல்றாங்க தெரியுமா? காரணம் இவை தான் தெரின்சுக்கோங்க!

ஆண்களில் சிலர் தெரிந்தே பொய் சொல்வதுண்டு. மற்றும் சிலர் மனைவி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பொய் கூறுவார்கள். எந்த காரணத்திற்காக பொய் சொன்னாலும் அவை பொய் கணக்கில் தான் சேரும்.
ஒரு சிறிய பொய் வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு அதற்கு சக்தி உள்ளது. பெரும்பாலும் ஆண்கள் பொய் சொல்வதற்கு காரணம் பெண்கள் தான் காரணமாக உள்ளதாக பலர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சரி வாங்க ஆண்கள் தங்கள் மனைவியிடம் குறிப்பாக எந்த விஷயத்திற்கு பொய் சொல்லுவார்கள் குறித்து பார்க்கலாம்..
  • மனைவியிடம் மிகவும் நேர்மையாக இருந்ததற்கு கடுமையான சோதனைகளை சந்தித்து இருக்கலாம். அவரின் நேர்மையை மதிக்காமல் மிகவும் காயப்படுத்திருப்பார்கள். இத்தகைய சூழலில் மாட்டி கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் சண்டை வரக்கூடாது என்று நினைப்பவர்கள் பொய் சொல்வதுண்டு.
  • இந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் உறவுக்கு பாதிப்பு வரும் என்று நினைப்பவர்கள் அந்த விஷயத்தை காதிற்கு கொண்டு போகாமல் அதை அப்படியே மறைப்பது உண்டு.
  • சிலர் விளையாட்டாக கூட பொய் சொல்வதுண்டு. தனது மனைவிக்கு இது பிடிக்காது என்று தெரிந்தும் கூட அந்த செயலை மீண்டும் செய்து வெறுப்பு ஏற்றுபவர்களும் உள்ளனர். நடக்காத விஷயங்களை நடந்த மாதிரி கூறுபவர்களும் உண்டு. முதிர்ச்சியின்மையால் செய்யக்கூடிய இந்த விஷயங்கள் அவர்களுக்கு பின்னாளில் ஆப்பதாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
  • ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களை ஈர்ப்பதற்காக பல பொய்களை அள்ளி தெளிப்பார்கள். உண்மைக்கு மாறாக பல பொய்களை அடுக்கி கொண்டு தங்களை நல்லவர்கள் போல தேன் சொட்டும் அளவிற்கு பேசி மயக்குவதுண்டு.
  • மனைவி ஒரு இடத்தில் செய்தது சரி என்றாலும் அவர்கள் தன்மானம் குறைந்து விடும் என்பதற்காக உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் அதிகாரத்துக்கு எந்தவித கலங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.