யாழில் கிணற்றில் வீழ்ந்த பசுவை மீட்கபோராடிய இளைஞர்களுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லாத வீட்டு வளவினுள் பாழடைந்த கிணறு ஒன்றினுள் தவறுதலாக பசு மாடு ஒன்று வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்பு படையின் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டு முயற்சியின் பயனாக குறித்த பசு பாதுகாப்பாக மீட்டெடுக் கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் ஜீவகாருண்ய சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.