இலங்கையில் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் சக்தி வாய்ந்த மின்னல் ஏற்படும் ஆபத்து இருப்பதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நேற்றைய தினம் மதியம் முதல் இன்றைய தினம் முற்பகல் வரையான காலத்தில் இந்த சக்தி வாய்ந்த மின்னல் ஏற்படக் கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம்.

அத்துடன் கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களிலும் இவ்வாறான சக்தி வாய்ந்த மின்னல்கள் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது.

இதனால், பொது மக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை கையாள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு இடி,மழையுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது திடீர் காற்றும் வீசக்கூடும். எனவே, பொது மக்கள் புயல் மற்றும் மின்னலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.