இலங்கைக்கு மிக விரைவில் வரும் ஆபத்து! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் மிக விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அத்துல சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் பதுளை, கண்டி, மடுல்சீமை, லுணுகம்வெஹர, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுக்கமைய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

இதன் காரணமாக மேல் மாகாணத்தில் நிலநடுக்கம் உணரும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.